Monday, 4 February 2019

Indian Defence Force


நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு , எல்லை பாதுகாப்பு மற்றும் இதர பிரிவுகளில் உள்துறை அமைச்சகத்தில் கீழ் நரேந்திர மோதி , ராஜ் நாத்சிங் இருவரும் சாதித்தது என்ன ??? 1998 கோவைத் தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 9 முக்கிய குற்றவாளிகளை அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் விடுதலை செய்த திமுக என்ற கட்சிக்கு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் தீவிரவாத நடவடிக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ள நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கு??? {அந்தக் குண்டு வெடிப்பில் குழந்தைகள் பெரியவர்கள் என்று 58 பேர் உயிரை இழந்தனர் ; 100க்கும் மேல் ஊனம் ஆனார்கள் - கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் திமுக வாக்கு வங்கிக்கு அவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களுக்கு நாமளும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் வோட்டு போடுகிறோம்.} அதே போல் 1962 போரில் சீனாவிடம் பெரும் பகுதியை இழந்து நாடு நின்ற போது அதற்குக் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு விளக்கத்தை நேரு கொடுத்தாரே பாருங்கள் அந்த காங்கிரஸ் கட்சிக்கு எல்லை பாதுகாப்பில் சீனாவின் அச்சுறுத்தலுக்குச் சிறிது கூட எதிர்த்து நிற்க தயக்கம் காட்டாது எல்லையைப் பாதுகாத்த நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன எந்தத் தகுதியும் இல்லை. நரேந்திரமோதி அவர்கள் கடந்த 4.5 வருடங்களில் உள் நாட்டு பாதுகாப்பில் சாதித்தது என்ன ???? இந்த வீடியோ பதிவில் விளக்கக் கொடுத்துள்ளேன். {1.10 மணி நேரம் பேசிய வீடியோ அதை 18நிமிடமாக முடிந்த அளவு சுருக்கியுள்ளோம். அதற்கு மேல் கடினம். பொறுமையாகக் கேட்கவும். மேற்கொண்டு முழு விவரம் அறிய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கைகளைத் தேடி படிக்கவும்.} -மாரிதாஸ்

No comments:

Post a Comment