Showing posts with label INDIA. Show all posts
Showing posts with label INDIA. Show all posts

Monday, 4 February 2019

Electricity Board


மின்சார துறையில் நரேந்திர மோதி செய்தது என்ன??? 1)ஒரு லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரித்தது. 2)99.85 இடங்களுக்கு மின்சாரத்தினை சேர்த்தது. 3)நிலக்கரி தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது. 2006-2011 ஆட்சிக் காலத்தில் 4000 MW மின்சார தேவையை கூட்ட வேண்டிய இடத்தில் 483MW மட்டுமே கூட்டி தினமும் 7 , 8 மணி நேரம் மின்சாரம் தடை செய்த திமுக - ஏறக்குறைய 1,00,000 MW மின்சார உற்பத்தியை நாடு முழுவதும் கூட்டி , 99.85% இடங்களுக்குத் தடையில்லா மின்சார வழங்க நாட்டைச் சீர்ப்படுத்திய நரேந்திர மோதி பற்றி பேச என்ன அருகதை இருக்கு??? என்ன யோக்கியதை இருக்கு???? மின்சார துறை மதிப்பெண் : 9/10 Bill Gates போன்றவர்கள் கூறுவது போல் இயற்கைக்குப் பாதுகாப்பான அணுமின் நிலையங்கள் அதிக அளவில் அதிகரிக்க வேண்டும் என்பது வேண்டுகோள். -மாரிதாஸ்

Indian Defence Force


நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு , எல்லை பாதுகாப்பு மற்றும் இதர பிரிவுகளில் உள்துறை அமைச்சகத்தில் கீழ் நரேந்திர மோதி , ராஜ் நாத்சிங் இருவரும் சாதித்தது என்ன ??? 1998 கோவைத் தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 9 முக்கிய குற்றவாளிகளை அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் விடுதலை செய்த திமுக என்ற கட்சிக்கு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் தீவிரவாத நடவடிக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ள நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கு??? {அந்தக் குண்டு வெடிப்பில் குழந்தைகள் பெரியவர்கள் என்று 58 பேர் உயிரை இழந்தனர் ; 100க்கும் மேல் ஊனம் ஆனார்கள் - கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் திமுக வாக்கு வங்கிக்கு அவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களுக்கு நாமளும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் வோட்டு போடுகிறோம்.} அதே போல் 1962 போரில் சீனாவிடம் பெரும் பகுதியை இழந்து நாடு நின்ற போது அதற்குக் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு விளக்கத்தை நேரு கொடுத்தாரே பாருங்கள் அந்த காங்கிரஸ் கட்சிக்கு எல்லை பாதுகாப்பில் சீனாவின் அச்சுறுத்தலுக்குச் சிறிது கூட எதிர்த்து நிற்க தயக்கம் காட்டாது எல்லையைப் பாதுகாத்த நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன எந்தத் தகுதியும் இல்லை. நரேந்திரமோதி அவர்கள் கடந்த 4.5 வருடங்களில் உள் நாட்டு பாதுகாப்பில் சாதித்தது என்ன ???? இந்த வீடியோ பதிவில் விளக்கக் கொடுத்துள்ளேன். {1.10 மணி நேரம் பேசிய வீடியோ அதை 18நிமிடமாக முடிந்த அளவு சுருக்கியுள்ளோம். அதற்கு மேல் கடினம். பொறுமையாகக் கேட்கவும். மேற்கொண்டு முழு விவரம் அறிய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கைகளைத் தேடி படிக்கவும்.} -மாரிதாஸ்

Water polution


உலகம் முழுவதும் 5% இறப்புகள், 80% நோய்களுக்குக் காரணம் தண்ணீர் சுத்தம். நாடு முழுவதும் 48,06,543 இடங்களில் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அலுவலகம் தொட்டு அனைத்து இடங்களிலும் குடிநீர் தரம் சரியாக இருக்க வழிவகை செய்துள்ளது மோடி அரசு. தமிழகத்தில் 3,59,038 மாதிரிகள் எடுக்கப்பட்டு - 3,55,365 இடங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லை. மற்ற இடங்களுக்கு முறையாக அறிவுரை வழங்கியுள்ளது. நாட்டிலேயே இந்த சர்வீஸ் அதிகம் கிடைத்த மாநிலம் தமிழகம். கண்மூடிதனமாக மோடி ஒழிக சொல்லும் முன் யோசி... #மோடி2019 {ஆதாரத்திற்கு National rural drinking water programme கொடுக்கும் ரிப்போர்ட் பார்க்கவும்.} -மாரிதாஸ் {இந்த விதம் 400 முதல் 500 தகவல்கள் தேர்தல் சந்திக்கும் முன் தினமும் வெளியிடுவேன். கொண்டு சேர்க்கவும்.}

Republic Day


ஒற்றுமையாக இருங்கள் என்று கூறுவது தான் கடினம் தவிர பிரிவினை பேசுவதும் , பிரிவினை தூண்டுவதும் மிக எளிது. அது குடும்பம் என்றாலும் சரி நாடு என்றாலும் சரி இதுவே உண்மை. மதம் , இனம் , மொழி , ஜாதி என்று எந்தப் பிரிவினை எண்ணத்தாலும் நன்மை வந்துவிடப் போவது இல்லை இங்கே. அப்துல்கலாம் போன்ற மிகச் சிறந்த தேசியவாதிகளை மனதில் நிறுத்தி ஒன்றுபட்டு நின்று வண்ணமிகு இந்தியாவை வளம்பெறச் செய்யுங்கள். முறையாக வரி செலுத்துங்கள், வரி கொண்ட வருமானத்தை வைத்து நாட்டை ஆட்சி செய்ய ஜாதி மதம் எண்ணம் எல்லாம் விட்டு விட்டு நல்ல நிர்வாகிகளைத் தேடுங்கள்.