Showing posts with label MODI. Show all posts
Showing posts with label MODI. Show all posts

Monday, 4 February 2019

Electricity Board


மின்சார துறையில் நரேந்திர மோதி செய்தது என்ன??? 1)ஒரு லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரித்தது. 2)99.85 இடங்களுக்கு மின்சாரத்தினை சேர்த்தது. 3)நிலக்கரி தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது. 2006-2011 ஆட்சிக் காலத்தில் 4000 MW மின்சார தேவையை கூட்ட வேண்டிய இடத்தில் 483MW மட்டுமே கூட்டி தினமும் 7 , 8 மணி நேரம் மின்சாரம் தடை செய்த திமுக - ஏறக்குறைய 1,00,000 MW மின்சார உற்பத்தியை நாடு முழுவதும் கூட்டி , 99.85% இடங்களுக்குத் தடையில்லா மின்சார வழங்க நாட்டைச் சீர்ப்படுத்திய நரேந்திர மோதி பற்றி பேச என்ன அருகதை இருக்கு??? என்ன யோக்கியதை இருக்கு???? மின்சார துறை மதிப்பெண் : 9/10 Bill Gates போன்றவர்கள் கூறுவது போல் இயற்கைக்குப் பாதுகாப்பான அணுமின் நிலையங்கள் அதிக அளவில் அதிகரிக்க வேண்டும் என்பது வேண்டுகோள். -மாரிதாஸ்

Indian Defence Force


நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு , எல்லை பாதுகாப்பு மற்றும் இதர பிரிவுகளில் உள்துறை அமைச்சகத்தில் கீழ் நரேந்திர மோதி , ராஜ் நாத்சிங் இருவரும் சாதித்தது என்ன ??? 1998 கோவைத் தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 9 முக்கிய குற்றவாளிகளை அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் விடுதலை செய்த திமுக என்ற கட்சிக்கு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் தீவிரவாத நடவடிக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ள நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கு??? {அந்தக் குண்டு வெடிப்பில் குழந்தைகள் பெரியவர்கள் என்று 58 பேர் உயிரை இழந்தனர் ; 100க்கும் மேல் ஊனம் ஆனார்கள் - கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் திமுக வாக்கு வங்கிக்கு அவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களுக்கு நாமளும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் வோட்டு போடுகிறோம்.} அதே போல் 1962 போரில் சீனாவிடம் பெரும் பகுதியை இழந்து நாடு நின்ற போது அதற்குக் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு விளக்கத்தை நேரு கொடுத்தாரே பாருங்கள் அந்த காங்கிரஸ் கட்சிக்கு எல்லை பாதுகாப்பில் சீனாவின் அச்சுறுத்தலுக்குச் சிறிது கூட எதிர்த்து நிற்க தயக்கம் காட்டாது எல்லையைப் பாதுகாத்த நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன எந்தத் தகுதியும் இல்லை. நரேந்திரமோதி அவர்கள் கடந்த 4.5 வருடங்களில் உள் நாட்டு பாதுகாப்பில் சாதித்தது என்ன ???? இந்த வீடியோ பதிவில் விளக்கக் கொடுத்துள்ளேன். {1.10 மணி நேரம் பேசிய வீடியோ அதை 18நிமிடமாக முடிந்த அளவு சுருக்கியுள்ளோம். அதற்கு மேல் கடினம். பொறுமையாகக் கேட்கவும். மேற்கொண்டு முழு விவரம் அறிய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கைகளைத் தேடி படிக்கவும்.} -மாரிதாஸ்

Water polution


உலகம் முழுவதும் 5% இறப்புகள், 80% நோய்களுக்குக் காரணம் தண்ணீர் சுத்தம். நாடு முழுவதும் 48,06,543 இடங்களில் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அலுவலகம் தொட்டு அனைத்து இடங்களிலும் குடிநீர் தரம் சரியாக இருக்க வழிவகை செய்துள்ளது மோடி அரசு. தமிழகத்தில் 3,59,038 மாதிரிகள் எடுக்கப்பட்டு - 3,55,365 இடங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லை. மற்ற இடங்களுக்கு முறையாக அறிவுரை வழங்கியுள்ளது. நாட்டிலேயே இந்த சர்வீஸ் அதிகம் கிடைத்த மாநிலம் தமிழகம். கண்மூடிதனமாக மோடி ஒழிக சொல்லும் முன் யோசி... #மோடி2019 {ஆதாரத்திற்கு National rural drinking water programme கொடுக்கும் ரிப்போர்ட் பார்க்கவும்.} -மாரிதாஸ் {இந்த விதம் 400 முதல் 500 தகவல்கள் தேர்தல் சந்திக்கும் முன் தினமும் வெளியிடுவேன். கொண்டு சேர்க்கவும்.}

Madhurai AIIMS Hospital


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று வருகை தரும் நரேந்திரம் மோதி அவர்களை உள்ளன்புடன் வரவேற்கிறோம்.. ------------------------------------------------------------------------------ அது ஒருபுறம் இருக்கட்டும் இப்போ இந்த திமுக காரர்களுக்கு எதற்கு எதிர்ப்பு கருப்பு கொடி கோபேக் மோடி???? அரசியல் வேறு ஆட்சி வேறு என்று ஒரு சமூகம் வாழவேண்டும். ஆனால் தனது அரசியல் லாபத்திற்கும் கூச்சமே இல்லாமல் நாட்டு மக்கள் நாசம் ஆனாலும் பரவாயில்லை படிக்கும் பிள்ளைகள் படிப்பு கெட்டு நாசமானாலும் பராயில்லை என்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒரு பக்கம் தூண்டிவிட்டு - மறுபக்கம் வளர்ச்சி விசயத்தில் ஏறக்குறையத் திராவிட கட்சிகளால் புறாக்கணிக்கபட்ட நிலையில் இருக்கும் தென் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கித் திட்ட தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டிட வரும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கிளம்புவது சுத்த அயோக்கியத்தனமான அரசியல் அன்றி வேறு இல்லை. இப்போ என்ன சொல்லவருகிறார்கள் திமுகவினர்??? எய்ம்ஸ் வேண்டாம் என்றா???? இதைவிட அசிங்கமான கூட்டம் இந்த மே 17, விவசாய போராளிகள் போன்ற இரண்டு டஜன் போராளிகள். ராகுல் காந்தி , சோனியா காந்தி வந்தப்ப எங்கே போனார்கள் என்று கேளுங்கள் எவனும் வாயைத் திறக்க மாட்டான். என்ன விசேசம் என்றால் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வர திமுக காரனுகளே போராளியாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டம் தூண்டுபவனாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டத்தை புகழ்ந்து எழுதும் பத்திரிக்கையாளனாகவும் இருப்பான். இது எப்படி இருக்கு??? மக்களை வித விதமாக எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று தனி ஆய்வுக் கூடமே வைத்து இருப்பார்கள் போல். இது கனகட்சிதமான ஏமாற்றும் வேலை ஆனால் படித்தவனும் புரியாது. வெறுப்பு மனதில் வந்துவிட்ட பின் எப்படி எது புரியும்.! நான் கொள்ளை அடிக்கிறேன் - அரசு ஊழியர்களுக்கு அரசு கஜானாவை கொள்ளை அடிக்கக் கத்து கொடுக்கிறேன் - என்னுடன் வருபவன் கொள்ளை அடிக்கும் பணத்தில் பங்கு கொடுத்தால் அவனையும் சேர்த்து கொள்வேன் - மக்கள் ஓட்டு வாங்கக் காசு வாங்கி ஓட்டுப் போடு இல்லை இலவசம் வாங்கி ஓட்டுப் போடு என்று அவனையும் கொள்ளைக்காரனாக மாற்றுவேன். ஆகா ஆகா என்ன ஒரு கட்சி... இதுவல்லவா அரசியல் கட்சி. சரி கட்சியாது நல்ல நிலையில் இருக்கா என்றால் கருணாநிதி முன் திமுக = அண்ணாதுரை , சொல்லி செல்வன் சம்பத் , நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன் என்று இருந்தார்களே! கருணாநிதி பின் திமுக = கருணாநிதி அவர்கள் மகன் ஸ்டாலின் தலைவர் , அடுத்த தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் , கருணாநிதி மகள் கனிமொழி , பேரன் தயாநிதி , மூன்றாம் கலைஞர் உதயநிதி ஏம்பா உங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஒரு கேடு ????? கேட்டால் சுயமரியாதை பற்றி வாய் கிழிய கிழிய வகுப்பெடுப்பது. இந்த சத்தியராஜ் ஒரு நடிகன் எங்கே இதைப் பற்றி வாயைத் திறக்க கூறுங்கள்.. இல்லை திராவிட இயக்கம் என்று வசனம் பேசி திரியும் எவரையாது வாயைத் திறக்க கூறுங்கள்???? நான் நாட்டை காலி செய்கிறேன். அந்த அளவிற்குக் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் கால்களை நக்கிப் பிழைக்கும் வாழ்வு பெற்றுவிட்ட பின் வாய் மட்டும் குறையவில்லை போலும். இப்படி ஒரு ஈனப் பிழைப்பு.... சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்! இந்த வரிகள் கட்சிதமாக பொருந்தும் ஒரே கூட்டம் திமுக அன்றி உலகத்தில் வேறு இல்லை. எனவே திமுகவினர் இங்கே கருப்பு கொடி காட்டுவதற்கு பதில் கருணாநிதி அவர்கள் கொள்ளு பேரன் பேத்திக்கு துணி துவைக்கும் வேலை போல் எதாவது இருந்தால் சென்று பார்க்கவும். ஏன் என்றால் அது உங்களுக்கு இன்னும் பலன் அளிக்கும். நீங்கள் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ------------------------------------------------------------------------------- இங்கே நேர்மையான அரசியலைத் தேடும் எந்த ஒருவனும் "தன் மட்டத்தில் தன்னுடைய நேர்மையை ஊழல் என்று கேள்வி எழுப்ப இடம் தராத அளவிற்கு தன் குடும்பத்தை நடுத்தர குடும்பமாகக் கொண்டு ஒரு பொதுவாழ்வை வாழும் நரேந்திர மோதி அவர்கள் மதுரைக்கு வரவேற்பதைப் பெருமை கொள்வர்" தவிர அது கட்சி அரசியல் தாண்டிய ஒரு சிந்தனை. என்னைப் போல் பலர் உண்டு கட்சி தாண்டி அவரின் நல்ல அரசியலை விரும்பும் நபர்கள். அவர்கள் அனைவர் சார்பாகவும் நரேந்திரமோதி அவர்களை உள்ளன்போடு வரவேற்கிறேன். மோதி அவர்களுக்கு நன்றி. -மாரிதாஸ்