மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று வருகை தரும் நரேந்திரம் மோதி அவர்களை உள்ளன்புடன் வரவேற்கிறோம்..
------------------------------------------------------------------------------
அது ஒருபுறம் இருக்கட்டும் இப்போ இந்த திமுக காரர்களுக்கு எதற்கு எதிர்ப்பு கருப்பு கொடி கோபேக் மோடி????
அரசியல் வேறு ஆட்சி வேறு என்று ஒரு சமூகம் வாழவேண்டும்.
ஆனால் தனது அரசியல் லாபத்திற்கும் கூச்சமே இல்லாமல் நாட்டு மக்கள் நாசம் ஆனாலும் பரவாயில்லை படிக்கும் பிள்ளைகள் படிப்பு கெட்டு நாசமானாலும் பராயில்லை என்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒரு பக்கம் தூண்டிவிட்டு - மறுபக்கம் வளர்ச்சி விசயத்தில் ஏறக்குறையத் திராவிட கட்சிகளால் புறாக்கணிக்கபட்ட நிலையில் இருக்கும் தென் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கித் திட்ட தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டிட வரும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கிளம்புவது சுத்த அயோக்கியத்தனமான அரசியல் அன்றி வேறு இல்லை.
இப்போ என்ன சொல்லவருகிறார்கள் திமுகவினர்??? எய்ம்ஸ் வேண்டாம் என்றா????
இதைவிட அசிங்கமான கூட்டம் இந்த மே 17, விவசாய போராளிகள் போன்ற இரண்டு டஜன் போராளிகள். ராகுல் காந்தி , சோனியா காந்தி வந்தப்ப எங்கே போனார்கள் என்று கேளுங்கள் எவனும் வாயைத் திறக்க மாட்டான். என்ன விசேசம் என்றால் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வர திமுக காரனுகளே போராளியாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டம் தூண்டுபவனாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டத்தை புகழ்ந்து எழுதும் பத்திரிக்கையாளனாகவும் இருப்பான். இது எப்படி இருக்கு??? மக்களை வித விதமாக எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று தனி ஆய்வுக் கூடமே வைத்து இருப்பார்கள் போல். இது கனகட்சிதமான ஏமாற்றும் வேலை ஆனால் படித்தவனும் புரியாது. வெறுப்பு மனதில் வந்துவிட்ட பின் எப்படி எது புரியும்.!
நான் கொள்ளை அடிக்கிறேன் - அரசு ஊழியர்களுக்கு அரசு கஜானாவை கொள்ளை அடிக்கக் கத்து கொடுக்கிறேன் - என்னுடன் வருபவன் கொள்ளை அடிக்கும் பணத்தில் பங்கு கொடுத்தால் அவனையும் சேர்த்து கொள்வேன் - மக்கள் ஓட்டு வாங்கக் காசு வாங்கி ஓட்டுப் போடு இல்லை இலவசம் வாங்கி ஓட்டுப் போடு என்று அவனையும் கொள்ளைக்காரனாக மாற்றுவேன். ஆகா ஆகா என்ன ஒரு கட்சி... இதுவல்லவா அரசியல் கட்சி. சரி கட்சியாது நல்ல நிலையில் இருக்கா என்றால்
கருணாநிதி முன் திமுக = அண்ணாதுரை , சொல்லி செல்வன் சம்பத் , நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன் என்று இருந்தார்களே!
கருணாநிதி பின் திமுக = கருணாநிதி அவர்கள் மகன் ஸ்டாலின் தலைவர் , அடுத்த தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் , கருணாநிதி மகள் கனிமொழி , பேரன் தயாநிதி , மூன்றாம் கலைஞர் உதயநிதி
ஏம்பா உங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஒரு கேடு ????? கேட்டால் சுயமரியாதை பற்றி வாய் கிழிய கிழிய வகுப்பெடுப்பது. இந்த சத்தியராஜ் ஒரு நடிகன் எங்கே இதைப் பற்றி வாயைத் திறக்க கூறுங்கள்.. இல்லை திராவிட இயக்கம் என்று வசனம் பேசி திரியும் எவரையாது வாயைத் திறக்க கூறுங்கள்???? நான் நாட்டை காலி செய்கிறேன். அந்த அளவிற்குக் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் கால்களை நக்கிப் பிழைக்கும் வாழ்வு பெற்றுவிட்ட பின் வாய் மட்டும் குறையவில்லை போலும். இப்படி ஒரு ஈனப் பிழைப்பு....
சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!
அவர் எப்போதும் வால் பிடிப்பார்!
இந்த வரிகள் கட்சிதமாக பொருந்தும் ஒரே கூட்டம் திமுக அன்றி உலகத்தில் வேறு இல்லை. எனவே திமுகவினர் இங்கே கருப்பு கொடி காட்டுவதற்கு பதில் கருணாநிதி அவர்கள் கொள்ளு பேரன் பேத்திக்கு துணி துவைக்கும் வேலை போல் எதாவது இருந்தால் சென்று பார்க்கவும். ஏன் என்றால் அது உங்களுக்கு இன்னும் பலன் அளிக்கும்.
நீங்கள் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
-------------------------------------------------------------------------------
இங்கே நேர்மையான அரசியலைத் தேடும் எந்த ஒருவனும் "தன் மட்டத்தில் தன்னுடைய நேர்மையை ஊழல் என்று கேள்வி எழுப்ப இடம் தராத அளவிற்கு தன் குடும்பத்தை நடுத்தர குடும்பமாகக் கொண்டு ஒரு பொதுவாழ்வை வாழும் நரேந்திர மோதி அவர்கள் மதுரைக்கு வரவேற்பதைப் பெருமை கொள்வர்" தவிர அது கட்சி அரசியல் தாண்டிய ஒரு சிந்தனை. என்னைப் போல் பலர் உண்டு கட்சி தாண்டி அவரின் நல்ல அரசியலை விரும்பும் நபர்கள். அவர்கள் அனைவர் சார்பாகவும் நரேந்திரமோதி அவர்களை உள்ளன்போடு வரவேற்கிறேன்.
மோதி அவர்களுக்கு நன்றி.
-மாரிதாஸ்
No comments:
Post a Comment