Sunday, 3 February 2019

நரேந்திர மோதி அவர்களின் ஆட்சியில் எது பாராட்டதக்க விசயம்? ஒரு சாமானியன் பார்வையில்?


நரேந்திர மோதி அவர்களின் ஆட்சியில் எது பாராட்டதக்க விசயம்? ஒரு சாமானியன் பார்வையில்? செயற்கையான விலைவாசி ஏற்றம் ஏற்படக் காரணம் பதுக்கல்காரர்கள். அந்த பதுக்கல்காரர்கள் கடந்த 2000 வருடம் மேலாகவே இருக்கிறார்கள். அனைத்து அரசர்கள் காலத்திலும் இருந்துள்ளார்கள். செயற்கையாக ஒரு தேவை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் தங்களிடம் உள்ள பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்து அதன் வழி நல்ல லாபம் ஈட்டுவது. மற்ற பொருட்களுக்கு சரி அது தொழில் தந்திரமாக இருக்கலாம் , ஆனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் இந்தவிதம் நடக்காமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும். பருவமழை குறையும் காலங்களில் வெங்காயம் முதல் பருப்பு வரை பதுக்கல் அதிகரிக்கும். இது ஆக அவசியமான முக்கியமான கடமை ஆட்சிக்கு வருபவர்கள் அவர்களை ஒடுக்க வேண்டும். அந்த வகையில் நரேந்திர மோதி அவர்கள் இந்தியா சந்தித்த இரண்டாவது மிகச் சிறந்த பிரதமர் ஆவார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு இந்த விசயத்திற்காகவே மக்கள் வாக்கு செலுத்தலாம். பதுக்கல்காரர்களை கடுமையாக ஒடுக்கியுள்ளார் நரேந்திர மோதி அவர்கள். இதனால் விலை கட்டுக்குள் உள்ளது. இதை அரசியல் வெறுப்புக்காக சிலர் தவறு என்று உண்மையை மறைக்கலாம் ஆனால் இது அசைக்கமுடியாத உண்மை. இன்னொரு coincident இது பிஜேபி கட்சிக்குச் சாதகமாக பேசவேண்டும் என்பதற்காகக் கூறவில்லை ஆனால் உண்மையிலேயே இந்தியாவில் இரண்டு முறை இந்தப் பொருட்கள் விலையேற்றம் கட்டுக்குள் நிலையாக இருந்துள்ளது அந்த இரண்டு முறையும் பிஜேபி கட்சியே ஆட்சியில் இருந்துள்ளனர். ஒன்று 1999 முதல் 2005 வரை. அடுத்து இப்போ கடந்த 4 வருடங்கள். முதல் முறை வாஜ்பாய் அவர்கள் இன்று நரேந்திர மோதி அவர்கள். வாஜ்பாய் அவர்கள் நல்லவிதமாக விட்டுச் சென்ற இந்த விலையேற்றம் சார்ந்த நிர்வாகம் மன்மோகன் பொருளாதார மேதை காலத்தில் மெல்ல மெல்ல 4.5% என்ற அளவில் இருந்து 6.37% - 8.3% என்று கூடி 2010 முதல் ஆட்சி முடியும் வரை 10% வரை இருந்தது. இது நரேந்திர மோதி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தான் கட்டுக்குள் வந்தது இன்று மெல்லக் குறைந்து 3.3% முதல் 4.2% என்ற அளவில் தொடர்கிறது. {அதே நேரம் 3, 4% கட்டாயம் இருக்க வேண்டும் அது நாட்டிற்கு நல்லது - ஏன் என்றால் நிலங்கள் விலை ஏற்றம் ஆரம்பித்து பணியாளர்கள் சம்பள உயர்வு வரை நாட்டில் இருக்கும் போது இது 4% என்ற அளவில் பொருட்கள் விலை ஏற்றம் இருப்பது நல்லதே. } ஆதாரத்துடன் கூடிய உண்மை இது. வெறும் மீம்ஸ் அல்ல. -மாரிதாஸ்

No comments:

Post a Comment