ஊழல் ஒழிப்புக்கு என்ன செய்தார் நரேந்திர மோடி?
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு ஊழியர்கள் வழியாகச் சென்று சேர்க்கும் போது 1 ரூபாய் ஒதுக்கினால் 15 பைசா கூட போய்ச் சேர்வது இல்லை. அந்த அளவிற்கு நம் அரசு ஊழியர்கள் கடமை உணர்வுடன் லஞ்சம் வாங்குவர். இது 1985ல் ராஜிவ் முதல் 2009ல் மன்மோகன் வரை ஒப்புக்கொண்ட வாக்குமூலம்.
அதற்கு என்ன தீர்வு உருவாக்கினார்கள்? ஆனால் நரேந்திரமோதி தீர்வு கண்டார்.
மோடி ஆட்சிக்கு வந்த பின் அதற்கு அவர் கொடுத்த தீர்வு அனைவருக்கும் வங்கி கணக்கு(PMJDY) உருவாக்வோம் அனைத்துத் திட்டத்தையும் மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கு வழியாக நேரடியாகக் கொண்டு சேர்ப்போம். 2014ல் 28 திட்டங்கள் மட்டுமே நேரடியாக வங்கி வழியாகச் சென்றது மக்களுக்கு இன்று 55 அமைச்சகத்தின் கீழ் சுமார் 437 நலத் திட்டங்கள் உதவித் தொகையை மக்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்கிறார். ஏறக்குறைய அனைத்துத் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்தவிதமே சென்று சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்றி அமைத்துள்ளார்.
இதன் மூலம் பலனடைந்தவர் தமிழகத்தில் மட்டும் சுமார் 3கோடிக்கும் அதிகம்.
முதியோர் உதவித் தொகை ஆரம்பித்து கேஸ் மானியம் , 100 நாள் வேலை வாயுப்பு உத்திரவாதம் தொகை வரை அனைத்தையும் வங்கியில் நேரடியாக பெறுகிறார்கள். இது மக்கள் மத்தியில் நடந்த ஊழல்களுக்கான தீர்வாக கண்டார். இது தவிர 24 மணி நேரமும் ஊழல் சார்ந்து புகார் அளிக்க அனைத்து அமைச்சகம் - தனியாகச் சேவை மய்யமும் உருவாக்கியுள்ளார்.
இப்போ அடுத்து மேல்மட்டத்தில் இருக்கும் ஊழல் முதலைகளான அமைச்சர்கள் , MP , MLA , உயர் மட்ட அதிகாரிகள் நடத்தும் நிர்வாகத்தைக் கெடுத்து நடத்தும் ஊழல்கள். இது தான் கருப்புப் பணம் உருவாவதில் மிக முக்கிய காரணம்.
இன்று நாட்டில் 2 லட்சத்திற்கு மேல் பணத்தினை பணமான பெறுவதும் கொடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது அனைத்து இடங்களிலும் - அரசின் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆரம்பித்து தனியார் பிசினஸ் செய்யும் இடங்கள் வரை. தொண்டு நிறுவனக்கள் நடத்துகிறேன் பேர்வழி தாங்கள் சம்பாரித்த கருப்புப் பணத்தை சலவை செய்யும் இடமும் மூடப் பட்டுவிட்டது இனி 2000க்கு மேல் பணமாக நன்கொடை பெறமுடியாது. சரி வீடுகள் நிலங்கள் என்று வாங்கிப் போடுவோம் என்றால் அதுவும் முடியாது அந்தப் பதிவு செய்யப்படும் அனைத்துச் சொத்து விவரங்களையும் ஆதார் எண் , PAN இரண்டுடன் இணைப்பது கட்டாயம் எனவே அரசு கண்காணிப்புக்குள் வந்தே ஆக வேண்டும் , சரி தங்கம் கிலோ கிலோவா வாங்கி வைக்கலாம் என்றால் அதுவும் வழி இல்லை அங்கேயும் இப்போ PAN எண் கேட்பர்.
சரி வாங்க ஆள் இருக்கும் போது கொடுத்துவிட்ட சொத்தை குறைவாகப் பதிவு செய்து அரசை ஏமாற்றலாமே??? என்றால் அது மிகக் குறைவாகவே ஏமாற்ற முடியும். ஏன் என்றால் கொடுப்பவன் கொடுக்கலாம் எவ்வளவு கோடி வேண்டுமானாலும் அதை வாங்கியவன் திரும்ப அதே வட்டத்தில் சிக்குவான்.
வருமான வரி கணக்கு தானே நாம்ம நாட்டில் CAக்கு தெரியாத வழியா. எதையும் எப்படியும் கணக்கு காட்டிவிடலாம் இல்லை அதிகாரிகளை adjust செய்யலாம் என்றால் அதுவும் வழி குறைவு E preceeding Assessments 100% நடக்கிறது. எனவே மேல்மட்டத்தில் லஞ்சம் வாங்க முடியாது என்று இல்லை வாங்கினால் கணக்கு காட்டமுடியாது - கணக்குக் காட்டாமல் உன்னால் அதை அனுபவிக்கவும் பெரிய அளவு முடியாது.
ஆக மக்கள் நேரடியாகப் பாதித்த திட்டங்களுக்கும், நாட்டின் மேல் மட்டத்தில் நடந்த பெரும் ஊழல்களுக்கும் மிகச் சரியானதொரு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் நடப்பதை விடக் குறைவான லஞ்சம் தான் இந்தியாவில் நடக்கிறது என்ற சூழல் உருவாகியுள்ளது. இன்று இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் 78 முன்னேறியுள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஐந்தாண்டுகளில் 50ஆவது இடத்திற்குள் கொண்டு செல்லும்.
நரேந்திர மோதி அவர்களுக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியை கொடுக்க வேண்டும் தொடர்ச்சியாக அதுவும் பெரும்பான்மை பலத்துடன். அது தான் என்னை கேட்டால் நாட்டிற்கு நல்லது.
-மாரிதாஸ்
No comments:
Post a Comment