பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரிப்பு. இப்படியான செய்திகளை அதிகம் காணமுடிகிறது, இது உண்மையா? இதற்கு உங்கள் விளக்கம் என்ன மாரிதாஸ். {கேள்வி : நிர்மல்}
நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை GST குறைத்துள்ளது , காங்கிரஸ் ஆட்சியில் OPEC அமைப்பிற்கு கட்சா எண்ணெய் இறக்குமதி செய்த கடன் மட்டும் சுமார் 2லட்சம் கோடியை வட்டியும் முதலுமாகக் கட்டியது நரேந்திர மோதி அரசு. இப்படி நாட்டில் தொழில் தொடங்கத் தேவையான ஏதுவான சூழலை உருவாக்கியது மட்டும் அல்லாது - மானியங்களை நேரடியாக மக்களுக்கு வழங்கவும் வித்திட்டது மூலமாக ஆண்டுக்கு 90,000கோடி மிச்சமாவதால் நாட்டின் கட்டமைப்பும் மேம்பட்டுள்ளது.
இந்த நிலையில் உண்மையில் இந்தியாவிற்கு உலக வங்கிகள் போன்ற அமைப்புகள் மூலம் 2.2கோடி கோடி கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் 82 லட்சம் வரை மட்டுமே கடன் இருக்கின்றது என்பது என்னைக் கேட்டால் குறைவான அளவு. அமெரிக்கா , ஜெர்மனி , யுனேட்டட் கிங்டம் எல்லாம் GDPல் 80%மேல் கடன் வாங்கும் போது இந்தியா 20% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது சரியல்ல.
என்னடா கடன் அதிகரித்துவிட்டது என்று கூறினால் கடன் இன்னும் அதிகம் வாங்கி இருக்க வேண்டும் என்று கூறுவதாக நினைக்க வேண்டும் அதுதான் உண்மை.
ஒரு நபருக்கு 40லட்சம் வீட்டுக் கடன் கொடுக்கும் முன் அந்த நபர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வருமானம் இருக்கிறதா ??? அதன் மதிப்பு என்ன ??? அவருடைய மற்ற கடன்கள் என்ன என்ன? அதை எப்படிச் செலுத்துகிறார்? மற்ற தகுதிகள் என்ன என்று பார்த்துவிட்டு தான் கடனே கொடுக்கப்படுகிறது. சரிதானே... தன் குடிமகனுக்கே 40லட்சத்திற்கே இந்த அளவில் ஆயிரம் தகவல்கள் சரிபார்த்து அதன் பின் கொடுக்கப்படிகிறது. இந்த நிலையில் ஒரு நாட்டிற்கு 82லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது என்றால் உலக வங்கி போன்ற அமைப்புகள் என்ன என்ன அளவுகோல்கள் வைத்திருக்கும் சற்று சிந்திக்க வேண்டும்.
சும்மா அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது இல்லை. அதன் தகுதிக்கு கொடுக்கப் படுகிறது. முதலில் நமக்கு இது புரியவேண்டும்.
இரண்டாவது நம் நாடு உண்மையில் 2கோடி கோடி கடன் வாங்கும் அளவுக்கு GDP திறன் உள்ளது. ஆனால் ஆம் வாங்கி இருப்பது 82லட்சம் கோடி. இதுவே தவறு. கடன் பெறுவதற்கு தடையாக உள்ள சிக்கல்களை கலையவேண்டும். நமக்கு இருக்கும் கிரிடிட் அளவிற்குக் கடனை பெற முயற்சிக்க வேண்டும். அது தான் என்னைக் கேட்டால் நல்லது. ஏன்????
இந்த வீடியோ பதிவில் என்னால் முடிந்த அளவு எளிமையாக எடுத்து விளக்கியுள்ளேன்...
மாணவர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது இது தான் : "கடன் தவறல்ல ஆனால் தன் உயரம் அறிந்து அதை அணுகவேண்டும். இருப்பதை விட்டுப் பறக்க ஆசை கொண்டு கடன் வாங்கிடும் போது தான் அது பெரும் ஆபத்தை உருவாக்கும். எனவே முதலில் கடன் என்றாலே தவறு என்ற விதமான சிந்தனைகளை விட்டுவிட்டு - தனி நபர் கடன்கள் , ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கடன் பெரும் கடன் வழிமுறைகள் - ஒரு நாடு கடன் பெறக் கொண்டுள்ள வழிமுறைகள் என்று அனைத்தைக் கடன்கள் பின்னாலும் இருக்கும் பொருளாதார சிக்கலை புத்திசாலித்தனத்தை கொஞ்சம் தேடி படிக்கவும். நாடு மட்டும் அல்ல Apple நிறுவனம் ஆரம்பித்து reliance industries வரை எடுத்து பார் கடன் அளவு பல மடங்கு கூடி இருக்கும். அதன் சரியான அர்த்தம் புரிந்து கொள்ள முயற்சி செய். அது உனக்கு மிக மிக நல்லது".
நரேந்திர மோதி இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் நிச்சயம் நாடு மிகச் சிறப்பானதொரு நிலையை எட்டும். இதை உணர நாட்டின் பொருளாதார விசயத்தை நீங்கள் நேரு காலத்தில் இருந்து தெளிவாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நரசிமராவ் காலத்திற்குப் பின் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் தெளிவாக தெரிந்து. கடந்த ஆட்சியருடன் ஒப்பிட்டால் நரேந்திர மோதி என்ற மனிதரின் நிர்வாகத் திறன் புரியும். மீம்ஸ் விட்டு இப்படி தேடி படிக்கவும் விசயம் புரியும்.
-மாரிதாஸ்
No comments:
Post a Comment