#எம்ஜியாரின் கடைசி காலத்தில் அவருக்கு #ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனது என்பதால் மக்களுக்கும் அப்போது ஜெயலலிதாவின் மேல் பெரிய அபிமானம் இல்லாமல்தான் இருந்தது..!
ஆனால், எம்ஜியாரின் மறைவுக்குப் பிறகு, திமுக, திக, திராவிட போராளிகள் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக, நஞ்சைக் கக்கி விமர்சித்தனர்..! மிகக் கேவலமான முறைகளில் எதிர்ப்பைக் காட்டினர்..!
அப்போது மக்கள் யோசித்தனர்: "இவர்கள் யோக்கியர்களா..? கிடையாதே..? எனில், இவர்கள் ஒருவரை இவ்வளவு அடிமட்டமாக விமர்சித்து, எதிர்க்கிறார்க்ள் என்றால், அவர் - ஜெயலலிதா - வல்லவர் நல்லவர்தானோ..?" என்று யோசிக்க ஆரம்பித்தனர்..!
"இவர்கள் எதற்காகவோ பயப்படுகிறார்கள்.. அந்த உதறலில்தான் இப்படி ஜெயலலிதாவின் மேல் இவ்வளவு வெறுப்பைக் கக்குறார்கள்.. ! இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்.." என்று தமிழக மக்கள் அப்போது சிந்தித்தனர்..! அந்தக் காரணத்தால்தான், அப்போது ஜெயலலிதாவை மக்கள் ஆதரிக்கவே ஆரம்பித்தனர்..! ஜெயலலிதா தமிழக அரசியலில் கோலோச்சத் தொடங்கினார்..!
கட்சிகளுக்கிடையே அரசியல் எதிர்ப்பு என்பது எல்லா மாநிலங்களிலும் இருக்கும்..! ஆனால், தமிழகத்தில் நடப்பது போன்ற கண்மூடித்தனமான, அறிவுகெட்டத்தனமான Go back Modi போன்ற கேவலமான வெறுப்பு அரசியல் எங்கேயும் கிடையாது..!
"இவர்கள் எதற்காகவோ பயப்படுகிறார்கள்.. அந்த உதறலில்தான் இப்படி மோடியின் மேல் இவ்வள்வு வெறுப்பைக் கக்குறார்கள்..! இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்.." என்று இப்போது தமிழக மக்கள் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்..!
Author : Zeke Ravi
No comments:
Post a Comment