Sunday, 3 February 2019

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரிப்பு. இப்படியான செய்திகளை அதிகம் காணமுடிகிறது, இது உண்மையா? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?


பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரிப்பு. இப்படியான செய்திகளை அதிகம் காணமுடிகிறது, இது உண்மையா? இதற்கு உங்கள் விளக்கம் என்ன மாரிதாஸ். {கேள்வி : நிர்மல்} நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை GST குறைத்துள்ளது , காங்கிரஸ் ஆட்சியில் OPEC அமைப்பிற்கு கட்சா எண்ணெய் இறக்குமதி செய்த கடன் மட்டும் சுமார் 2லட்சம் கோடியை வட்டியும் முதலுமாகக் கட்டியது நரேந்திர மோதி அரசு. இப்படி நாட்டில் தொழில் தொடங்கத் தேவையான ஏதுவான சூழலை உருவாக்கியது மட்டும் அல்லாது - மானியங்களை நேரடியாக மக்களுக்கு வழங்கவும் வித்திட்டது மூலமாக ஆண்டுக்கு 90,000கோடி மிச்சமாவதால் நாட்டின் கட்டமைப்பும் மேம்பட்டுள்ளது. இந்த நிலையில் உண்மையில் இந்தியாவிற்கு உலக வங்கிகள் போன்ற அமைப்புகள் மூலம் 2.2கோடி கோடி கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் 82 லட்சம் வரை மட்டுமே கடன் இருக்கின்றது என்பது என்னைக் கேட்டால் குறைவான அளவு. அமெரிக்கா , ஜெர்மனி , யுனேட்டட் கிங்டம் எல்லாம் GDPல் 80%மேல் கடன் வாங்கும் போது இந்தியா 20% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது சரியல்ல. என்னடா கடன் அதிகரித்துவிட்டது என்று கூறினால் கடன் இன்னும் அதிகம் வாங்கி இருக்க வேண்டும் என்று கூறுவதாக நினைக்க வேண்டும் அதுதான் உண்மை. ஒரு நபருக்கு 40லட்சம் வீட்டுக் கடன் கொடுக்கும் முன் அந்த நபர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வருமானம் இருக்கிறதா ??? அதன் மதிப்பு என்ன ??? அவருடைய மற்ற கடன்கள் என்ன என்ன? அதை எப்படிச் செலுத்துகிறார்? மற்ற தகுதிகள் என்ன என்று பார்த்துவிட்டு தான் கடனே கொடுக்கப்படுகிறது. சரிதானே... தன் குடிமகனுக்கே 40லட்சத்திற்கே இந்த அளவில் ஆயிரம் தகவல்கள் சரிபார்த்து அதன் பின் கொடுக்கப்படிகிறது. இந்த நிலையில் ஒரு நாட்டிற்கு 82லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது என்றால் உலக வங்கி போன்ற அமைப்புகள் என்ன என்ன அளவுகோல்கள் வைத்திருக்கும் சற்று சிந்திக்க வேண்டும். சும்மா அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது இல்லை. அதன் தகுதிக்கு கொடுக்கப் படுகிறது. முதலில் நமக்கு இது புரியவேண்டும். இரண்டாவது நம் நாடு உண்மையில் 2கோடி கோடி கடன் வாங்கும் அளவுக்கு GDP திறன் உள்ளது. ஆனால் ஆம் வாங்கி இருப்பது 82லட்சம் கோடி. இதுவே தவறு. கடன் பெறுவதற்கு தடையாக உள்ள சிக்கல்களை கலையவேண்டும். நமக்கு இருக்கும் கிரிடிட் அளவிற்குக் கடனை பெற முயற்சிக்க வேண்டும். அது தான் என்னைக் கேட்டால் நல்லது. ஏன்???? இந்த வீடியோ பதிவில் என்னால் முடிந்த அளவு எளிமையாக எடுத்து விளக்கியுள்ளேன்... மாணவர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது இது தான் : "கடன் தவறல்ல ஆனால் தன் உயரம் அறிந்து அதை அணுகவேண்டும். இருப்பதை விட்டுப் பறக்க ஆசை கொண்டு கடன் வாங்கிடும் போது தான் அது பெரும் ஆபத்தை உருவாக்கும். எனவே முதலில் கடன் என்றாலே தவறு என்ற விதமான சிந்தனைகளை விட்டுவிட்டு - தனி நபர் கடன்கள் , ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கடன் பெரும் கடன் வழிமுறைகள் - ஒரு நாடு கடன் பெறக் கொண்டுள்ள வழிமுறைகள் என்று அனைத்தைக் கடன்கள் பின்னாலும் இருக்கும் பொருளாதார சிக்கலை புத்திசாலித்தனத்தை கொஞ்சம் தேடி படிக்கவும். நாடு மட்டும் அல்ல Apple நிறுவனம் ஆரம்பித்து reliance industries வரை எடுத்து பார் கடன் அளவு பல மடங்கு கூடி இருக்கும். அதன் சரியான அர்த்தம் புரிந்து கொள்ள முயற்சி செய். அது உனக்கு மிக மிக நல்லது". நரேந்திர மோதி இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் நிச்சயம் நாடு மிகச் சிறப்பானதொரு நிலையை எட்டும். இதை உணர நாட்டின் பொருளாதார விசயத்தை நீங்கள் நேரு காலத்தில் இருந்து தெளிவாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நரசிமராவ் காலத்திற்குப் பின் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் தெளிவாக தெரிந்து. கடந்த ஆட்சியருடன் ஒப்பிட்டால் நரேந்திர மோதி என்ற மனிதரின் நிர்வாகத் திறன் புரியும். மீம்ஸ் விட்டு இப்படி தேடி படிக்கவும் விசயம் புரியும். -மாரிதாஸ்

ஊழல் ஒழிப்புக்கு என்ன செய்தார் நரேந்திர மோடி?


ஊழல் ஒழிப்புக்கு என்ன செய்தார் நரேந்திர மோடி? மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு ஊழியர்கள் வழியாகச் சென்று சேர்க்கும் போது 1 ரூபாய் ஒதுக்கினால் 15 பைசா கூட போய்ச் சேர்வது இல்லை. அந்த அளவிற்கு நம் அரசு ஊழியர்கள் கடமை உணர்வுடன் லஞ்சம் வாங்குவர். இது 1985ல் ராஜிவ் முதல் 2009ல் மன்மோகன் வரை ஒப்புக்கொண்ட வாக்குமூலம். அதற்கு என்ன தீர்வு உருவாக்கினார்கள்? ஆனால் நரேந்திரமோதி தீர்வு கண்டார். மோடி ஆட்சிக்கு வந்த பின் அதற்கு அவர் கொடுத்த தீர்வு அனைவருக்கும் வங்கி கணக்கு(PMJDY) உருவாக்வோம் அனைத்துத் திட்டத்தையும் மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கு வழியாக நேரடியாகக் கொண்டு சேர்ப்போம். 2014ல் 28 திட்டங்கள் மட்டுமே நேரடியாக வங்கி வழியாகச் சென்றது மக்களுக்கு இன்று 55 அமைச்சகத்தின் கீழ் சுமார் 437 நலத் திட்டங்கள் உதவித் தொகையை மக்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்கிறார். ஏறக்குறைய அனைத்துத் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்தவிதமே சென்று சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்றி அமைத்துள்ளார். இதன் மூலம் பலனடைந்தவர் தமிழகத்தில் மட்டும் சுமார் 3கோடிக்கும் அதிகம். முதியோர் உதவித் தொகை ஆரம்பித்து கேஸ் மானியம் , 100 நாள் வேலை வாயுப்பு உத்திரவாதம் தொகை வரை அனைத்தையும் வங்கியில் நேரடியாக பெறுகிறார்கள். இது மக்கள் மத்தியில் நடந்த ஊழல்களுக்கான தீர்வாக கண்டார். இது தவிர 24 மணி நேரமும் ஊழல் சார்ந்து புகார் அளிக்க அனைத்து அமைச்சகம் - தனியாகச் சேவை மய்யமும் உருவாக்கியுள்ளார். இப்போ அடுத்து மேல்மட்டத்தில் இருக்கும் ஊழல் முதலைகளான அமைச்சர்கள் , MP , MLA , உயர் மட்ட அதிகாரிகள் நடத்தும் நிர்வாகத்தைக் கெடுத்து நடத்தும் ஊழல்கள். இது தான் கருப்புப் பணம் உருவாவதில் மிக முக்கிய காரணம். இன்று நாட்டில் 2 லட்சத்திற்கு மேல் பணத்தினை பணமான பெறுவதும் கொடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது அனைத்து இடங்களிலும் - அரசின் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆரம்பித்து தனியார் பிசினஸ் செய்யும் இடங்கள் வரை. தொண்டு நிறுவனக்கள் நடத்துகிறேன் பேர்வழி தாங்கள் சம்பாரித்த கருப்புப் பணத்தை சலவை செய்யும் இடமும் மூடப் பட்டுவிட்டது இனி 2000க்கு மேல் பணமாக நன்கொடை பெறமுடியாது. சரி வீடுகள் நிலங்கள் என்று வாங்கிப் போடுவோம் என்றால் அதுவும் முடியாது அந்தப் பதிவு செய்யப்படும் அனைத்துச் சொத்து விவரங்களையும் ஆதார் எண் , PAN இரண்டுடன் இணைப்பது கட்டாயம் எனவே அரசு கண்காணிப்புக்குள் வந்தே ஆக வேண்டும் , சரி தங்கம் கிலோ கிலோவா வாங்கி வைக்கலாம் என்றால் அதுவும் வழி இல்லை அங்கேயும் இப்போ PAN எண் கேட்பர். சரி வாங்க ஆள் இருக்கும் போது கொடுத்துவிட்ட சொத்தை குறைவாகப் பதிவு செய்து அரசை ஏமாற்றலாமே??? என்றால் அது மிகக் குறைவாகவே ஏமாற்ற முடியும். ஏன் என்றால் கொடுப்பவன் கொடுக்கலாம் எவ்வளவு கோடி வேண்டுமானாலும் அதை வாங்கியவன் திரும்ப அதே வட்டத்தில் சிக்குவான். வருமான வரி கணக்கு தானே நாம்ம நாட்டில் CAக்கு தெரியாத வழியா. எதையும் எப்படியும் கணக்கு காட்டிவிடலாம் இல்லை அதிகாரிகளை adjust செய்யலாம் என்றால் அதுவும் வழி குறைவு E preceeding Assessments 100% நடக்கிறது. எனவே மேல்மட்டத்தில் லஞ்சம் வாங்க முடியாது என்று இல்லை வாங்கினால் கணக்கு காட்டமுடியாது - கணக்குக் காட்டாமல் உன்னால் அதை அனுபவிக்கவும் பெரிய அளவு முடியாது. ஆக மக்கள் நேரடியாகப் பாதித்த திட்டங்களுக்கும், நாட்டின் மேல் மட்டத்தில் நடந்த பெரும் ஊழல்களுக்கும் மிகச் சரியானதொரு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் நடப்பதை விடக் குறைவான லஞ்சம் தான் இந்தியாவில் நடக்கிறது என்ற சூழல் உருவாகியுள்ளது. இன்று இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் 78 முன்னேறியுள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஐந்தாண்டுகளில் 50ஆவது இடத்திற்குள் கொண்டு செல்லும். நரேந்திர மோதி அவர்களுக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியை கொடுக்க வேண்டும் தொடர்ச்சியாக அதுவும் பெரும்பான்மை பலத்துடன். அது தான் என்னை கேட்டால் நாட்டிற்கு நல்லது. -மாரிதாஸ்

நரேந்திர மோதி அவர்களின் ஆட்சியில் எது பாராட்டதக்க விசயம்? ஒரு சாமானியன் பார்வையில்?


நரேந்திர மோதி அவர்களின் ஆட்சியில் எது பாராட்டதக்க விசயம்? ஒரு சாமானியன் பார்வையில்? செயற்கையான விலைவாசி ஏற்றம் ஏற்படக் காரணம் பதுக்கல்காரர்கள். அந்த பதுக்கல்காரர்கள் கடந்த 2000 வருடம் மேலாகவே இருக்கிறார்கள். அனைத்து அரசர்கள் காலத்திலும் இருந்துள்ளார்கள். செயற்கையாக ஒரு தேவை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் தங்களிடம் உள்ள பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்து அதன் வழி நல்ல லாபம் ஈட்டுவது. மற்ற பொருட்களுக்கு சரி அது தொழில் தந்திரமாக இருக்கலாம் , ஆனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் இந்தவிதம் நடக்காமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும். பருவமழை குறையும் காலங்களில் வெங்காயம் முதல் பருப்பு வரை பதுக்கல் அதிகரிக்கும். இது ஆக அவசியமான முக்கியமான கடமை ஆட்சிக்கு வருபவர்கள் அவர்களை ஒடுக்க வேண்டும். அந்த வகையில் நரேந்திர மோதி அவர்கள் இந்தியா சந்தித்த இரண்டாவது மிகச் சிறந்த பிரதமர் ஆவார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு இந்த விசயத்திற்காகவே மக்கள் வாக்கு செலுத்தலாம். பதுக்கல்காரர்களை கடுமையாக ஒடுக்கியுள்ளார் நரேந்திர மோதி அவர்கள். இதனால் விலை கட்டுக்குள் உள்ளது. இதை அரசியல் வெறுப்புக்காக சிலர் தவறு என்று உண்மையை மறைக்கலாம் ஆனால் இது அசைக்கமுடியாத உண்மை. இன்னொரு coincident இது பிஜேபி கட்சிக்குச் சாதகமாக பேசவேண்டும் என்பதற்காகக் கூறவில்லை ஆனால் உண்மையிலேயே இந்தியாவில் இரண்டு முறை இந்தப் பொருட்கள் விலையேற்றம் கட்டுக்குள் நிலையாக இருந்துள்ளது அந்த இரண்டு முறையும் பிஜேபி கட்சியே ஆட்சியில் இருந்துள்ளனர். ஒன்று 1999 முதல் 2005 வரை. அடுத்து இப்போ கடந்த 4 வருடங்கள். முதல் முறை வாஜ்பாய் அவர்கள் இன்று நரேந்திர மோதி அவர்கள். வாஜ்பாய் அவர்கள் நல்லவிதமாக விட்டுச் சென்ற இந்த விலையேற்றம் சார்ந்த நிர்வாகம் மன்மோகன் பொருளாதார மேதை காலத்தில் மெல்ல மெல்ல 4.5% என்ற அளவில் இருந்து 6.37% - 8.3% என்று கூடி 2010 முதல் ஆட்சி முடியும் வரை 10% வரை இருந்தது. இது நரேந்திர மோதி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தான் கட்டுக்குள் வந்தது இன்று மெல்லக் குறைந்து 3.3% முதல் 4.2% என்ற அளவில் தொடர்கிறது. {அதே நேரம் 3, 4% கட்டாயம் இருக்க வேண்டும் அது நாட்டிற்கு நல்லது - ஏன் என்றால் நிலங்கள் விலை ஏற்றம் ஆரம்பித்து பணியாளர்கள் சம்பள உயர்வு வரை நாட்டில் இருக்கும் போது இது 4% என்ற அளவில் பொருட்கள் விலை ஏற்றம் இருப்பது நல்லதே. } ஆதாரத்துடன் கூடிய உண்மை இது. வெறும் மீம்ஸ் அல்ல. -மாரிதாஸ்

சாராதா சிட் பண்ட் மோசடி வழக்கு


குஜராத் சம்பவத்தின் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் ஸ்பெசல் இன்வெஸ்டிகேசன் டீமை அனுப்பியது மோடிஜீயை விசாரிக்க... மோடிஜீ எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்காமல் 10 மணி நேரம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார்...மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கவேண்டும்... #4000_தமிழ்_குடும்பங்கள் நடுத்தெருவில் விட்ட 50000 கோடி ஊழல் சாராதா சிட் பண்ட் மோசடி வழக்கு.. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் ஒன்றில் சம்பந்தப்பட்ட ஒரு மாநகர கமிஷனர் மூன்று நாட்களாக எங்கிருக்கிறார் என்ற தகவலே இல்லை ...மாநில தேர்தல் ஆணையர் கூட்டிய கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார் ...சி.பி.ஐ யினர் கமிஷனர் வீட்டிற்கு சென்ற போது மாநில போலீசார் அவர்களை மறித்து காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று உள்ளனர்..#மமதை பானார்ஜியோ உடனே பதறி துடித்து கமிஷனர் வீட்டிற்க்கே போகுது ...அதோட மட்டும் இல்லை டிஜிபி மற்றும் ஏடிஜிபியும் கமிஷனர் வீட்டிற்கு சென்று உள்ளனர்...எல்லாத்தை விட கொடுமை கூத்து மாநில போலீசார் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தையே முற்றுகையிட்டது தான் ...கமிஷனருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் தான் சி.பி.ஐ விசாரிக்க சென்று உள்ளது...!! ஊரை கொள்ளை அடித்தால் இப்படித்தான் நடுரோட்டுக்கு வரனும்...கொள்ளை அடித்த கூட்டம் அப்படியே நடுரோட்டுக்கு வந்துவிட்டது பாருங்கள்....!!

Sunday, 3 June 2018