என் மனதில் தோன்றிய சில கருத்துக்கள்.சிலரின் எண்ணம் வாழ்க்கையில் சுயமாக சாதிக்கமுடியுமாஎன்று .என் கருத்து என்னெவென்றால் மாதா ,பிதா,குரு ,தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.அதை ஒரு முறை நினைத்து பார்க்க வேண்டும் .என்றுமே நம்மை வயிற்றில் சுமப்பவள் அம்மா என்றால் நெஞ்சிலிலும் ,தோளிலும் சுமப்பவர் அப்பா .நம் வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பவர் குரு ,நம் வாழ்க்கை முழுவதும் நம்மை காப்பவர்.தெய்வம் .இவர்களில் நாம் ஒருவரை நினைக்க மறந்தாலும் நம் சிந்தனைகள் எவ்வாறு நடைபெறும் ???? தாயிற்சிறந்த கோவிலும் இல்லை,என்று அதிகம் பேசுபவர்கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை அதிகம் நினைக்க மறந்து விடுகிறோம் .நம் குழந்தை பருவத்தில் நம் தாய்தன் சுகதுக்கங்களைமறந்து நம்மை பார்த்துக்கொள்கிறார்கள் .தந்தையோ தனக்கு என்று எதுவும் செய்துகொள்ளாமல்தன் குடும்பம் நம் குழந்தை என்று கஷ்டபடுகிறார்.தாயோ ,தந்தையோ இல்லாதவர்களிடம்கேட்டு பாருங்கள் அந்த வலி ,அந்த வேதனை எவ்வளவு கடினம் என்று.பணம் மட்டும் வாழ்க்கையில் ப்ராதனம் இல்லை,சொந்தங்கள் ,மற்றவர்களை விட பெற்றவர்களே ப்ரதானம் என்று புரிந்து கொண்டாலே வாழ்க்கையில் எல்லா எண்ணங்களும் நிறைவு பெறும்.
No comments:
Post a Comment