Wednesday, 10 August 2016

திராவிடம் ஒரு மாயை 
திராவிடம் ஒரு கானல் நீர் 
திராவிடம் ஒரு மோசடி
திராவிடம்னா தலித் தலித்னு சொல்லி அவகளையும் பிழைக்கவிடாமல் இவனுகளை மட்டுமே பிழைக்க வைக்கும் ஓர் அட்சயபாத்திரம்
அண்ணே திரவிடம்ன்ன எண்ணணே?
ஒரு இந்துவ நீ இந்து இல்லை தலீத்துனு சொல்லி
இந்துக்களிடம் இருந்து தலீத் சகோதரர்களை லவட்டிக்கிட்டு போறது தான் திராவிடம் ..!
குழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க!பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவைஎன்னவென்று பார்க்கலாம்.குழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.6. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும்காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.7. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.8. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.9. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.10. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களைமேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
நமது கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்கும் சத்குருவை ஆதரிப்போம்.ISISக்கு ஆள்சேர்க்கும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடக்கும் போது வேடிக்கை பார்த்தவர்கள்,நமது பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாத்து பரப்பிவரும் "ஈஷா"வை எதிப்பது பைத்தியகாரத்தனம். வெள்ளியங்கிரி மலையை கிருஸ்தவ காருண்ய ஆக்கிரமித்து கொண்ட போது வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தோன்றிய ஈஷா மதமாற்ற கும்பலுக்கு செக் வைத்தது, இன்று ஒன்னும் இல்லாத காரணத்திற்காக சத்குருவை குறி வைக்கிறார்கள் இதில் இந்து மத எதிர்ப்பு கும்பலின் சதி இருக்கிறது ஆகவே நாம் மனபூர்வமாக சத்குருவை ஆதரிக்கிறோம்.



Karumam Da







Lusa Erupanooo



என் மனதில் தோன்றிய சில கருத்துக்கள்.சிலரின் எண்ணம் வாழ்க்கையில் சுயமாக சாதிக்கமுடியுமாஎன்று .என் கருத்து என்னெவென்றால் மாதா ,பிதா,குரு ,தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.அதை ஒரு முறை நினைத்து பார்க்க வேண்டும் .என்றுமே நம்மை வயிற்றில் சுமப்பவள் அம்மா என்றால் நெஞ்சிலிலும் ,தோளிலும் சுமப்பவர் அப்பா .நம் வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பவர் குரு ,நம் வாழ்க்கை முழுவதும் நம்மை காப்பவர்.தெய்வம் .இவர்களில் நாம் ஒருவரை நினைக்க மறந்தாலும் நம் சிந்தனைகள் எவ்வாறு நடைபெறும் ???? தாயிற்சிறந்த கோவிலும் இல்லை,என்று அதிகம் பேசுபவர்கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை அதிகம் நினைக்க மறந்து விடுகிறோம் .நம் குழந்தை பருவத்தில் நம் தாய்தன் சுகதுக்கங்களைமறந்து நம்மை பார்த்துக்கொள்கிறார்கள் .தந்தையோ தனக்கு என்று எதுவும் செய்துகொள்ளாமல்தன் குடும்பம் நம் குழந்தை என்று கஷ்டபடுகிறார்.தாயோ ,தந்தையோ இல்லாதவர்களிடம்கேட்டு பாருங்கள் அந்த வலி ,அந்த வேதனை எவ்வளவு கடினம் என்று.பணம் மட்டும் வாழ்க்கையில் ப்ராதனம் இல்லை,சொந்தங்கள் ,மற்றவர்களை விட பெற்றவர்களே ப்ரதானம் என்று புரிந்து கொண்டாலே வாழ்க்கையில் எல்லா எண்ணங்களும் நிறைவு பெறும்.
வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து..!!!கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு திசையை பார்த்த கடைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாஸ்து நியதிகள் உள்ளன.கிழக்கு பார்த்த கடை:தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும்.காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கள் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரடு திசைகளிலும் அமரக் கூடாது.தெற்கு பார்த்த கடை:வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.மேற்கு பார்த்த கடை :வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கை புறம் பண பெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக் கூடாது.வடக்கு பார்த்த கடை:வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்கவேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.வாசற்படி:கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்குபார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும்ள கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.கதவுகள்:கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்குபார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில்மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.பூஜை இடம்: கடையின் ஈசான்ய மூலையில் கடவுள்படங்களையோஅல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.
ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான்,‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, அவனது ஆசிரியை‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார்.ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.ஆனால், அந்தச் சிறுவன் மட்டும்‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.ஆசிரியை கோபமாக,‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார்.சிறுவனோ,‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!மகிழ்வுடன் கூடிய இனிய காலை வணக்கம்...
*ஈஷா விஷயத்தில் பெண்களின் பெற்றோருக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நட்ட நடு நிலை ஊடகங்கள்தான் கோகுல்ராஜ், யுவராஜ் போன்றோர் நாடகக் காதலில் அழைத்து சென்ற பெண்களின் பெற்றோரை இருட்டடிப்பு செய்தனர்
* அற்புதம்மாள் அழுவதை காட்டுவார்கள் ஆனால் ராஜீவ் காந்தியோடு இறந்து போன அந்த 17 குடும்பங்களில் ஒருத்தரையும் அழைத்து விவாதிக்க மாட்டார்கள்..
ஈஷா யோகம் மையம் பளிங்கு கற்கலால் கட்டப்பட்டுள்ளது சாமியாருக்கு எதற்கு இவ்வளவு ஆடம்பர கட்டிடம் - கம்யூனிஸ்ட் கனகராஜ் குற்றச்சாட்டு
உண்டியல் குலுக்கி நாமே தி. நகரில் கார்பரேட் அலுவலகம் போல கட்சி அலுவலக கட்டிடம் கட்டும் போது ஃபீஸ் வாங்கி யோகா சொல்லி கொடுப்பவர் கட்ட கூடாதா??

இதெல்லாம் குற்றச்சாட்டா இல்ல உங்க வயித்தெரிச்சலா? மிஸ்டர் கனகராஜ்
சரக்கு மற்றும் சேவை வரி மசோதோ அரசியல் சாசனத்தின் 122வது சட்டத் திருத்தமாக ராஜ்ய சபாவில் நிறைவேறியது. இதன் மூலம் நம் தேசம் ஒற்றைப் பொருளாதார மண்டலமாக உருவெடுக்கிறது. ஏற்கனவே லோக்சபாவில் ஒப்புதல் பெறப்பட்டு விட்ட இச்சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் (01/04/2017) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ...தி.மு. உறுப்பினர்கள் மட்டுமே இந்த மசோதாவிற்கு எதிராகக் குரல் கொடுத்து, வெளிநடப்பும் செய்தனர். காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். 13 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க 202 ராஜ்ய சபா உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா சட்ட வடிவம் பெற்றது.
மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதைத் தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்துக் கட்சியினருக்கும், அனைத்து லோக்சபா, ராஜ்யசபா பிரதிநிதிகளுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
'தேச முன்னேற்றத்திற்கான படிக்கல்' என்று இதை வர்ணித்த பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்குப் புகழாரம் சூட்டும் வகையில் 'இது கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் வலுப்படுத்தும்; முன்னேற்றப் பாதையில் நாம் அனைவரும் இணைந்தே பயணிப்போம்' என்றும் கூறினார்.
சரக்கு மற்றும் சேவை வரி ‪#‎மசோதோவின்_பயன்கள்:
இதன் மூலம் பல்முனை வரி விதிப்பு முறை மாற்றப்பட்டு ஒற்றை வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமலாகும்.
தற்சமயம் ஒரே பொருளுக்கு 17 விதமான நேரடி மற்றும் மறைமுக சேவை, விற்பனை வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது. இது மாற்றப்பட்டு இனி ஒரே ஒரு வரி மட்டுமே வசூலிக்கப்படும்.
இது வரையில் ஒரு கடைநிலை விற்பனைப் பொருளுக்கு பல்வேறு நிலைகளில் வெவ்வேறு வரிகள் மீண்டும் மீண்டும் செலுத்தப்பட்டன, அதே போல ஒரே பொருளுக்கு பல்வேறு மட்டங்களில் மீண்டும் மீண்டும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இனி அங்கனம் வரிக்கு வரி செலுத்தத் தேவையில்லை.
ஒற்றை வரிவிதிப்பு முறை வரி செலுத்துவதை ஊக்குவிக்கும். வரி செலுத்துவோரை இரு மட்டங்களிலும் கண்காணிக்க ஏதுவாகிறது. இதனால் வரி ஏய்ப்பு தடுக்கப்படுகிறது.
எந்தப் பொருள் அல்லது சேவைக்கும் வரி விலக்கு கிடையாது.
இணையத் தள வர்த்தகம் ஊக்குவிக்கப்படும்.
மூலதனப் பொருட்களின் விலை 12% முதல் 14% வரை குறையும். இதனால் மூலதனப் பொருட்கள் மீதான முதலீடு 6% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மீதான 2% வரி நீக்கப்படுகிறது. இதனால் தடையற்ற பொருளாதார மண்டலம் ஏற்படும்.
பொருட்களின் போக்குவரத்துச் செலவு குறையும்.
மேற்கூறிய காரணங்களால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறைந்து உள்நாட்டுத் தயாரிப்பு அதிகரிக்கும்.
உள்நாட்டில் தயாரிக்கப்படுவதாலும், சீரான வரி விதிப்பாலும் கடைநிலைப் பொருட்களின் விலை வெகுவாகக் குறையும்.
உள் நாட்டு உற்பத்தியால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
ஏற்றுமதி அதிகரிக்கும். அதன் மூலம் வருவாய் பெருகும். நாட்டின் நிதி நிலைமை சீராகும்.
நாளடைவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.
ஒட்டுமொத்தத்தில் தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
இது வரை வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் ஏறக் குறைய 28% முதல் 32% மொத்த வரியானது இனி ஒற்றைப் பெயரில் அனைத்து நிலைகளிலும் சேர்த்து 18% அல்லது 20% வரியாக வசூலிக்கப்படும்.
உதாரணமாக ஒருவர் தான் வாங்கிய மூலப் பொருளை மதிப்புக் கூட்டி, லாபத்தையும் சேர்த்து விற்கிறார் என்றால் தனது பங்களிப்பான மதிப்புக் கூட்டல் மற்றும் லாபத்திற்கான 20% வரியை மட்டுமே கூடுதலாகச் செலுத்துவார். மூலதனப் பொருளுக்கு முதல் முறையிலேயே 20% வரி செலுத்தப்பட்டிருக்கும்.
ஒற்றை வரி விதிப்பிற்கான முன் யோஜனை முதல் முறையாக 2003-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முன் வைக்கப்பட்டது.
2006-07 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவாக அறிவித்தது.
22/03/2011- அன்று அரசியல் சாசனத்தின் 115-ஆவது சட்டத் திருத்தமாக இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த லோக்சபாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு அந்த மசோதா காலாவதி ஆனது.
பாரதப் பிரதமராக திரு நரேந்திர மோதி அவர்கள் பொறுப்பேற்ற உடன் 19/12/2014-அன்று நம் அரசியல் சாசனத்தின் 122-ஆவது சட்டத் திருத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
06/05/2015 அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதா லோக் சபாவில் நிறைவேறியது.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் போட்ட முட்டுக் கட்டையினால் ஓராண்டுக்கும் மேலாக மசோதா நிறைவேற்றப்படவில்லை.
பேச்சு வார்த்தை நடத்தி அனைத்துக் கட்சியினரது கருத்துக்களையும், ஒப்புதலையும் பெற்ற மத்திய அரசு இந்தக் கூட்டத் தொடரில் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது.
03/08/2016 அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் (01/04/2017) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.
29 மாநிலங்களும், 9 மத்திய நேரடி ஆளுகைப் பிரதேசங்களும் அந்தந்த மாநிலங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
புதிய நடைமுறை என்பதால் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சற்றே கால தாமதம் ஆகலாம்.

மதிப்பிற்குரிய திரு H raja ji பதிவிலிருந்து