Monday, 5 June 2017

About Thiruvannamalai

திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம் தற்போது உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. கிரிவலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பல பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆர்வத்தாலும், பக்திமிகுதியாலும் திருவண்ணமலைக்கு வந்து ஏதோ ஒரு வகையில் கிரிவலம் செய்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதற்கு சில நியமங்கள் உள்ளன.

 

.

 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையில் கிரிவலத்தை 
    துவக்க ராஜகோபுரமே சிறந்த இடம். இறை 
    தரிசனம் முடித்து ராஜ கோபுரத்தில் வீற்றிருக்கும் 
    செல்வக்கணபதியைக் கைதொழுது கிரிவலம் துவக்க 
    வேண்டும். அமைதியான முறையில், வேகமாக 
    நடக்காமல், மிதமான கதியில் நடந்துதான் 
    கிரிவலம் செய்ய வேண்டும். வாகனங்களில் செல்வது 
    விரும்பத்தக்கதல்ல. மனதில் சிவ நாமங்களைக் கூறி 
    ஜபித்தபடி கிரிவலம் செய்ய வேண்டும்.

    தென் கிழக்குத் திசையில் அமைந்துள்ள இந்திரன்
    தொழுத லிங்கமான இந்திர லிங்கமே அஷ்ட 
    லிங்கங்களில் முதல் லிங்கம். இங்குதான் அஷ்ட லிங்க 
    தரிசனம் தொடங்குகிறது. பிறகு அக்கினி லிங்கம்,
    எம லிங்கம், நிருதி லிங்கம், சூரிய லிங்கம், வருண 
    லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் 
    என அஷ்ட லிங்கங்களையும் தரிசித்த படி கிரிவலம் 
    வரவேண்டும்.

    கிரிவலப் பாதையில் சேஷாத்திரி சுவாமிகள் 
    ஆசிரமம், ஸ்ரீ ரமண ஆசிரமம், நந்திமுக தரிசனம், 
    திருநேர் அண்ணாமலை. ஆதி அருணாச்சலேஸ்வரர் 
    ஆலயம், இடுக்குப் பிள்ளையார் கோயில், பஞ்ச முக 
    தரிசனம் உட்பட பல கோவில்களும், சிறிய 
    ஆலயங்களும் உள்ளன. தங்கள் நேரத்திற்கும், 
    உடல்நிலைக்கும் ஏற்றவாறு பக்தர்கள் இவற்றையும் 
    தரிசனம் செய்தல் நலம்.

                  வருடத்தின் எல்லா நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். 
    ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலனை 
    வழங்குவதில் வல்லவர் அருணைவாழ் ஈசர். என்ற 
    போதும் ஐப்பசி, கார்த்திகை. மார்கழி  போன்ற 
    மாதங்களும், எல்லா மாதங்களின் பௌர்ணமி தினமும், 
    பிரதோஷ­ காலமும், சிவராத்திரி, அமாவாசை போன்ற 
    நாட்களிலும் கிரிவலம் செய்வது சிறந்த பல 
    பலன்களைக் கொடுக்கும்.

    ஞாயிற்றுக் கிழமைகளில் கிரிவலம் செய்வோருக்கு 
    சிவபதவி கிட்டும். திங்கள் கிழமை கிரிவலம் இந்திர 
    பதவி தரும். செவ்வாய் கிரிவலம் வறுமையையும், 
    கடனையும் நீக்கும். புதன் கிரிவலம் கலைகளில் 
    தேர்ச்சியும், படிப்பில் உயர்நிலையும் தரும். 
    வியாழக்கிழமை கிரிவலம் ஞானத்தைக் கொடுக்கும். 
               

  வெள்ளிக்கிழமை கிரிவலம் இக. பர முகங்களையும், 
    லஷ்மி கடாக்ஷத்தையும் தரும். சனிக்கிழமை 
    கிரிவலம் நவக்கிரக தோ­த்தை நீக்கும். மன நிறைவு, 
    தோ­ நிவர்த்தி, சகல வியாதி குணம் உட்பட எல்லா 
    பலன்களும் கிரிவலத்தால் கிடைக்கின்றன. 
            

        கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்கும் அண்ணாமலைக்குச் 
           சென்று கிரிவலம் செய்வோம். எல்லா நலன்களும் பெறுவோம்!

No comments:

Post a Comment